Saturday 14 September 2013

TamilNadu Government



    சூரியகுலம் என்னும் வண்ணார்குலத்தோரின் கோரிக்கைகள்;
1.தமிழக வண்ணார் சமூகத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு 60 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவையின் சார்பில் பாரதப்பிரதமர்  அவர்களிடம் தரப்பட மனுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு24.1.2008 ஆம் ஆண்டு நாளிட்ட பிரதம அலுவலக கடித எண். 8.3.2008 PMP 3/775305-ன்படி தமிழக அரசு தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக கடிதத்தின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கையை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
2.மத்திய அரசிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பதை பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கிறது.பிற்படுத்தப்பட்டோருக்காக மத்திய அரசு அமைத்துள்ள இந்த நிலைக்குழு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பயன் அடையாமல் கடைகோடியில் உள்ள சமுதாய மக்களுக்கும் சம உரிமை சமூகநீதி கிடைபதர்க்குரிய சரியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3.மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ள ஜனஸ்ரீபீமாயோஜனா என்ற திட்டத்தின் கீழ் அறிவித்துள்ள பயனை தமிழகத்தில் உள்ள அமைப்புச்சார தொழிலாளர்களும் மூலம் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மத்திய  அரசு அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தேசிய ஒய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை சலவைதொழிலாளர்களுக்கு கிடைக்கும் வாய்பை பெறுவதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
4.ஆந்திர அரசு நிதிநிலை அறிக்கையில் சலவைத்தொழிலாளர்களுக்கு தனியாக ரூ.57கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மான்ய கடன் வழங்கரூ.32 கோடி ரூபாயும், சலவைத்துறைகள் கட்ட 25கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்திருப்பதற்கு நன்றியையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதோடு தமிழக அரசும் வருகின்ற நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோர் நிதிநிலை அறிக்கையில்  சலவைத்தொழிலாளர் மேம்பாட்டிற்கு தனி நிதி ஒதுக்கீட்டினை வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அவர்களை கேட்டுக்கொள்கிறோம்
5.1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழக அரசின் சார்பில்  மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களை அழைத்து நடத்திய ஆலோசனை கூட்டத்தைப் போன்று மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அரசியல் ,பொருளாதாரம் , வலிமையில்லாத, மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மாநில நிர்வாகிகளை அழைத்துப்பேசி இன்றைய உண்மை நிலைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்
6.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் உள்ள மிகவும் பலவீனமான கடைநிலையில்  உள்ள சமூகத்தினர் அரசு அறிவிக்கும்  பயன்களை பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கும்  உதவும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வண்ணார் சமுதாயத்தை மிகமிக பிற்படுத்தப்பட்டோர் என தனியாக பிரித்து இச்சமுதாய  மக்கள் சமுதாயங்களின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறக்கூடிய ஆலோசனைக்குழு ஒன்றினை அமைத்துத் தருமாறு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
6.தமிழகத்தில் சலைவைத் தொழில் நாளும் நசிந்து  வருகின்றது. கோடைகாலங்களில் தண்ணீர் இல்லை. மழைக்காலங்களில் தொழில் செய்ய முடியவில்லை இதனால் தொழில் செய்வதில் நிரந்தர பாதிப்பு இருந்து வருவதுடன் சட்டமன்ற தொகுதி தோறும் சலவைத்துறைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற படாமல் உள்ளதால் சலைவைத்தொழிலை, உடல் உழைப்பை குறைத்து நவீன முறையில் சுகதரமாக செய்திட ஆரம்பகட்டமாக மாவட்டந்தோறும் நவீன உலர் சலவையகங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment